ADDED : செப் 19, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மா.கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த, 12ல் காலமானார். இதையொட்டி காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், சீதாராம் யெச்சூரியின் உருவபடத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தென்னை விவசாயிகள் சங்க, மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். சி.பி.ஐ., வெங்கடாசலம், வி.சி.க., சசிகுமார், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் பேசினர்.

