/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணத்தில் மயான கொள்ளை திருவிழா
/
காவேரிப்பட்டணத்தில் மயான கொள்ளை திருவிழா
ADDED : மார் 10, 2024 03:37 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அங் காளம்மன், பூங்காவனத்து அம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், தாம்சன்பேட்டை பூங் காவனத்து அம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா கடந்த, 7ல், கொடியேற்றத்துடன் துவங் கியது. நேற்று அதிகாலை முக வெட்டு நிகழ்ச்சியும், காலை, 6:00 மணி முதல் ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்திக்கொண்டு உரல் கல், ஜீப், பிக்கப்வேன், கார் போன்ற வாகனங்களை இழுத்துச் சென்றனர். மதியம், 3:00 மணிக்கு காளைகள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் பூங் காவனத்து அம்மன் மயான புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற அம்மனுக்கு, காவேரிப் பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகே பக்தர்கள் முதுகில் அலகு குத்தி, விமான அலகில் அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து தென் பெண்ணை ஆற்றங்கரையில் நடந்த மயான கொள்ளை விழா வில் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு பிரசாரம் செய்து, பக்தர்களுக்கு மஞ்சப் பைகள் இலவசமாக வழங் கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் தேசிய மாணவர் படை அலுவலர் கோபு, ஆசிரியர்கள், தேசிய பசுமை படை மாணவர்கள் உடனிருந்தனர்.

