ADDED : செப் 17, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள கொட்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன், 38; நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 15 மதியம், அவர் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது போதையில் அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வாஞ்சிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

