/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும் மூடப்படாத தலைவர்களின் சிலைகள்
/
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும் மூடப்படாத தலைவர்களின் சிலைகள்
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும் மூடப்படாத தலைவர்களின் சிலைகள்
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும் மூடப்படாத தலைவர்களின் சிலைகள்
ADDED : மார் 19, 2024 07:37 AM
ஓசூர் : தமிழகத்தில் வரும் ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஓசூர் மாநகராட்சி பகுதியை பொருத்தவரை, அண்ணா நகர் மற்றும் ராயக்கோட்டை சாலை சந்திப்பில், எம்.ஜி.ஆர்., சிலைகள் மற்றும் காமராஜர் சிலை என, நகர் முழுவதும் ஆங்காங்கு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த, 16 முதல் அமலுக்கு வந்துள்ளதால், தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க வேண்டும். ஆனால், ஓசூர் நகரிலுள்ள சிலைகளை, நேற்று மதியம் வரை மாநகராட்சி நிர்வாகம் மூடவில்லை.
ஓசூர் உழவர் சந்தை காம்பவுண்ட் சுவர், ஒன்றிய அலுவலக காம்பவுண்ட் சுவர் உட்பட நகர் பகுதியில் பொது இடங்களில் உள்ள போஸ்டர்கள் மற்றும் பேனர்களை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை, சுண்ணாம்பு பூசி அழிக்கும் பணியை துவங்கி மேற்கொண்டுள்ளனர்.
* ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை, ரவுண்டானா, கல்லாவி சாலை, பி.டி.ஓ., ஆபீஸ், சிங்காரப்பேட்டை, அனுமன் தீர்த்தம், காரப்பட்டு, கல்லாவி, சாமல்பட்டி, மத்துார் உள்ளிட்ட ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த பேனர்கள், கொடிகம்பங்கள், முழுவதுமாக பேரூராட்சி மற்றும் பஞ்., ஊழியர்கள், மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

