/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்
/
ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்
ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்
ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்
ADDED : மார் 14, 2024 01:19 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியிலுள்ள மொத்தம், 33 வார்டுகளின், பல இடங்களில் சிறு பாலங்கள், கழிவுநீர் கால்வாய், மோட்டார் பம்ப் உள்ளிட்டவைகள் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து முதல்கட்டமாக, 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி, கோ ஆப்பரேட்டிவ் காலனி, பாரதி நகர், மேற்கு மாடதெரு உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கலந்து கொண்ட கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பணிகளை, துவக்கி வைத்து பேசுகையில், “கிருஷ்ணகிரி நகராட்சியில், 9 வார்டுகளில் தார்ச்சாலை, சிமென்ட் சாலை, சிறுபாலம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் மீதமுள்ள வார்டுகளிலும் வளர்ச்சிப்
பணிகள் துவக்கி வைக்கப்படும்,” என்றார்.
கிருஷ்ணகிரி நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

