/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2000 நோட்டுக்கு ரூ.500கள் துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
/
ரூ.2000 நோட்டுக்கு ரூ.500கள் துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
ரூ.2000 நோட்டுக்கு ரூ.500கள் துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
ரூ.2000 நோட்டுக்கு ரூ.500கள் துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
ADDED : பிப் 08, 2024 09:14 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நேற்று, ஒட்டப்பட்டிருந்த- துண்டு பிரசுரங்களில், '2000 ரூபாய் நோட்டு கொடுத்தால், அதற்கு பதிலாக, 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்' என குறிப்பிட்டு, மொபைல் எண்ணுடன் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு இருந்தது-.
கடந்த, 2023 மே, 20ல், 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் இந்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், வள்ளுவர்புரத்தை சேர்ந்த சீதாராமன், 58, என்பது தெரிந்தது.
அவர், பொங்கலையொட்டி வீட்டை சுத்தம் செய்யும்போது, நான்கு, 2000 ரூபாய் நோட்டுகள் வீட்டில் கிடைத்ததாகவும், அதை சென்னை ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுபோல, 2000 ரூபாய் நோட்டு உள்ளவர்களிடம் கேட்டு வாங்கி, அதை மாற்றி, 500 ரூபாய் கமிஷன் எடுத்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், துண்டு பிரசுரத்தை ஒட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், 'உங்களிடம் ஏதும், 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதா' என, போலீசாரிடமே கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், 'இவ்வாறெல்லாம் செய்யக்கூடாது, 2000 ரூபாயை அரசு திரும்ப பெற்ற நிலையில், இதுபோல துண்டு பிரசுரங்களை ஒட்டக்கூடாது' என, எச்சரித்தனர்.

