/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பறக்கும் படை சோதனையில் ரூ.22.80 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படை சோதனையில் ரூ.22.80 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 05, 2024 01:24 AM
ஓசூர்:ஓசூர்
சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், அலசநத்தம், மத்திகிரி,
நல்லுார் சோதனைச்சாவடி உட்பட மொத்தம், 7 இடங்களில், தனித்தனியாக
வாகன சோதனை செய்தனர்.
இதில், 3 பேர் வாகனங்களில் உரிய ஆவணமின்றி
கொண்டு சென்ற, 13 லட்சத்து, 4,110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு,
ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. வேப்பனஹள்ளி சட்டசபை
தொகுதி பறக்கும் படையினர், அத்திகுண்டா சோதனைச்சாவடி வழியாக வந்த
இரு பைக்குகள் மற்றும் 64 ம் நம்பர் அரசு டவுன் பஸ் ஆகியவற்றில் சோதனை
செய்தனர். இதில் பஸ்சில் வந்த பெண் பயணி மற்றும் பைக்கில் வந்த பெண்
உட்பட, 3 பேர், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த, 2.86 லட்சம் ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டது.
தளி தொகுதி பறக்கும்படையினர்,
தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு
நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற டீ சர்ட், சேலை
என, மொத்தம், 610 புதிய துணிகள் மற்றும் 550 துணி பைகள் பறிமுதல்
செய்யப்பட்டன. அதேபோல், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 74,000 ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டு, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டது.
* பர்கூர் மற்றும் ஒப்பந்தவாடி
கூட்டுரோடு அருகே என, 3 இடங்களில் தேர்தல் பறக்கும் படையில் வாகன
சோதனை நடத்தினர். இதில், இந்த, 3 இடங்களிலும் உரிய ஆவணமின்றி எடுத்து
வந்த மூவரிடமிருந்து, 4.47 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, பர்கூர்
உதவி தேர்தல் அலுவலர் பன்னீர்செல்வம் தாசில்தார் திருமுருகன்
ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
* ஊத்தங்கரை மற்றும் கல்லாவி அருகே,
தேர்தல் கண்காணிப்பு குழுவினர், வாகன தணிக்கை நடத்தினர். அதில் உரிய
ஆவணமின்றி கார் மற்றும் பைக்கில் கொண்டு வந்த, 1.69 லட்சம் ரூபாயை
பறிமுதல் செய்து, ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில்
ஒப்படைத்தனர்.

