/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2.47 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.2.47 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : ஜன 28, 2026 06:03 AM
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காலபைரவர் கோவில் அருகே, 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., -
எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், கந்திகுப்பம் பைரவர் ஆலயம் அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கனிமங்களும் குவாரிகளும் மற்றும் துாய்மை பாரத இயக்கம் திட்டங்களில், 2.47 கோடி ரூபாய் மதிப்பில் கந்திகுப்பம் சாலை முதல் பைரவர் கோவில் வரை தார்ச்சாலை, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, 10 குளியல் அறைகள் மற்றும், 10 கழிவறை கட்டுமான பணிகளுக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, காலபைரவ சுவாமிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

