
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: சாலை பாதுகாப்பு மாதத்தை
முன்னிட்டு நேற்று, கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஏ.டி.எஸ்.பி., சங்கர், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரன் முன்னிலை
வகித்தனர். எஸ்.பி., தங்கதுரை தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணா-துரை சிலை அருகே துவங்கிய பேரணி, பெங்க-ளூரு
சாலை வழியாக அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், சாலை
பாதுகாப்பு விதிகள், ஹெல்மட்டின் அவசியம், விபத்து விழிப்புணர்வு வாசகங்கள்
அடங்கிய பதா-கைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஏந்தியபடி சென்றனர்.
போலீசார் மற்றும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.

