/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
/
மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ADDED : மார் 04, 2024 10:43 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதிய பஸ் ஸ்டாண்ட், டோல்கேட் ஆகிய பகுதிகளில் அமைத்திருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை, கலெக்டர் சரயு குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 959 முகாம்கள் மூலம், 5 வயது வரையுள்ள, 1,50,767 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் கலைவாணி உள்பட பலர் பங்கேற்றனர்.* ஓசூர் மாநகராட்சியில் மொத்தம், 66 இடங்களில் நேற்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் பின்புறமுள்ள அப்பாவு நகர் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சொட்டு மருந்து வழங்கும் முகாமை, மாநகர மேயர் சத்யா, குழந்தைகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் சினேகா, மாநகர நல அலுவலர் பிரபாகரன், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளி நலவாழ்வு மையத்தில், சொட்டு மருந்து வழங்கும் முகாமை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.

