/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வரும் ஒருவாரகாலம் ரொம்ப முக்கியம்'
/
'வரும் ஒருவாரகாலம் ரொம்ப முக்கியம்'
ADDED : மார் 09, 2024 12:55 AM
கிருஷ்ணகிரி, ''வரும் ஒரு வாரத்திற்கு, திண்ணை பிரசாரத்தை தி.மு.க.,வினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கிருஷ்ணகிரியில், மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மேற்கு மாவட்டசெயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
தர்மபுரியில் வரும், 11ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அணிஅணியாக திரண்டு கலந்து கொள்ள வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவித்து விடுவர். நாட்கள் குறைவாகவே உள்ளது. தி.மு.க.,வினருக்கு வரும் ஒரு வாரம் முக்கியமானது. இல்லம் தேடி ஸ்டாலின் குரல் எனும் திண்ணை பிரசாரத்தை தீவிரமாக செய்ய வேண்டும். அரசின் சாதனைகளை பாமர மக்கள் புரிந்து கொள்ளும்படி எளிமையாக எடுத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

