ADDED : டிச 18, 2025 06:25 AM
ஓசூர்: ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. கல்லுாரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்து, நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பள்ளி தலைமையாசிரியர் கவிதா, ஆராதனா தொண்டு நிறுவனர் ராதா, கல்லுாரி புள்ளியியல் துறைத்தலைவர் கருணாநிதி, தாவரவியல் துறைத்தலைவர் குமார், கணிதத்துறை தலைவர் சிவபாலன் ஆகியோர் பேசினர். முதல் நாள் நிகழ்ச்சியாக, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.எஸ்.ஐ., செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகனப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
தரமற்ற பொருட்கள் குறித்து புகார்நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை பாதுகாப்பு அலுவலர் ஜவஹர் தலைமையிலான அலுவலர்கள், கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டீ கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலப்பட பல கடைகளில் கலப்பட டீத்துாள் பயன்படுத்தியது தெரிந்து, பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, சமூக நுகர்வோர் நல, பாதுகாப்பு சங்க, மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கூறுகையில், ''கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்த புகார்களை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். அவை, நுகர்வோர் நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும், பொதுமக்கள் தங்கள் புகார்களை, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம், உடனடியாக தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
நுகர்வோர் சங்க, மாநில துணைத்தலைவர்கள் சையத் அஸ்ஹர், ஜெய்சன் மாநில செயலாளர் ரோஷன் ரஷீத் உள்பட பலர் உடனிருந்தனர்.

