/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உதிரி பாகங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க முடியாது'
/
'உதிரி பாகங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க முடியாது'
'உதிரி பாகங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க முடியாது'
'உதிரி பாகங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க முடியாது'
ADDED : ஏப் 17, 2024 12:39 PM
ஓசூர்: ''சிறு, குறுந்தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்களுக்கு, வாகனம் மற்றும் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்வதால், குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க முடியாது,'' என, காங்., கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறையின் மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான அரசு, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டது. ஆனால், நாடு முழுவதும் தொழிற்பேட்டையை உருவாக்கியதில்லை. சிறு, குறுந்தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்து விட்டு, பணம் பெற, 4 மாதங்களாகும். அப்படிப்பட்ட பண நெருக்கடி நேரத்தில், ஜி.எஸ்.டி.,யை கடன் வாங்கி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில், 3 மாதம் வட்டி கட்டா விட்டால் கூட, சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.
வங்கிகள், யார், யார் பணம் கட்டவில்லை என போஸ்டர் அடித்து, சிறு தொழில் செய்பவர்கள் மானம், மரியாதையை வாங்கி விட்டன. ஆனால், 16 லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட்டுகளுக்கு, பா.ஜ., அரசு தள்ளுபடி செய்துள்ளது. கல்விக்கடன் கட்ட முடியாதவர்களை அவமானப்படுத்துகின்றனர். ஒருவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி., சீர்த்திருத்தம் செய்யப்படும்.
சிறு, குறுந்தொழிற்சாலைகள் பல்வேறு நிறுவனங்களுக்கு, வாகனம் மற்றும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை சப்ளை செய்கின்றனர். அதனால், அரிசி, தானியங்களுக்கு கொடுப்பதை போல், குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின்போது, கிருஷ்ணகிரி லோக்சபா, காங்., வேட்பாளர் கோபிநாத், தொகுதி பார்வையாளர் கோபி, மேற்கு மாவட்ட, காங்., தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

