/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5.18 கோடியில் தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் காணொலியில் திறப்பு
/
ரூ.5.18 கோடியில் தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் காணொலியில் திறப்பு
ரூ.5.18 கோடியில் தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் காணொலியில் திறப்பு
ரூ.5.18 கோடியில் தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் காணொலியில் திறப்பு
ADDED : மார் 12, 2024 04:36 AM
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, கிருஷ்ணகிரியில், 5.18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடத்தை காணொலியில் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடத்தில், குத்துவிளக்கேற்றி வைத்து, அலுவலகத்தை பார்வையிட்டார்.
கோவை மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி, சேலம் தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) சுவாமிநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* ஓசூர் அடுத்த சித்தனப்பள்ளி அருகே, நல்லுார் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தர்மபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலமாக, முதல்வர் ஸ்டாலின், ஸ்டேஷனை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, கூடுதல் எஸ்.பி., சங்கு, டி.எஸ்.பி., பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ராணி குத்துவிளக்கேற்றினர்.
நல்லுார் ஸ்டேஷனின் முதல் இன்ஸ்பெக்டராக, ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த ராணி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து
தெரிவித்தனர்.

