ADDED : அக் 10, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா கடத்திய 2 கார் பறிமுதல்
ஓசூர், அக். 10-
ஓசூர், சிப்காட் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, அங்கு ஹோண்டா சிட்டி கார் ஒன்று கேட்பாரற்று நின்றது. போலீசார், காரை சோதனையிட்டதில், அதில், 1.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. காரை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகலுார் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் பாகலுார் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, டொயோடா பார்ச்சூனர் கார் பழுதடைந்த நிலையில் நின்றது. சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டதில், 3.92 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தை கண்டறிந்தனர். காரை கைப்பற்றிய போலீசார், விசாரித்து வருகின்றனர்.

