/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சிறுபான்மையினருக்காக போராடும் தி.மு.க., 'இண்டியா' கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்'
/
'சிறுபான்மையினருக்காக போராடும் தி.மு.க., 'இண்டியா' கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்'
'சிறுபான்மையினருக்காக போராடும் தி.மு.க., 'இண்டியா' கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்'
'சிறுபான்மையினருக்காக போராடும் தி.மு.க., 'இண்டியா' கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்'
ADDED : ஏப் 15, 2024 03:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர்பகுதியில் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில், தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டனர். அப்போது, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி மட்டுமே சிறுபான்மையினர் நலனுக்காக போராடக் கூடிய, வாதாடக்கூடிய, பல்வேறு பணிகளை செய்துள்ளது. சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவியருக்கு, புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்க உத்தரவிட்டது. 14 சிறுபான்மையினர் நல கல்லுாரி விடுதிகளில், 14 லட்சம் ரூபாய் செலவில், 'செம்மொழி நுாலகங்கள்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. அதே சிந்தனையுடன், 'இண்டியா' கூட்டணி உருவாகியுள்ளது. ஆனால், மத்திய பா.ஜ., அரசு ஒருசார்பு தன்மையுடன் நடந்து கொள்கிறது. ஜாதி, மத அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற, தி.மு.க.,வின் ஆட்சியை, மற்ற மாநிலங்கள் வரவேற்று, அதன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தி.மு.க.,வின் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர்வது போல், 'இண்டியா' கூட்டணி திட்டங்களும் அனைவருக்கும் சென்று சேரும். மத்தியில் நம் கூட்டணி, ஆட்சி அமைக்கும். கிருஷ்ணகிரியில் போட்டியிடும், காங்., வேட்பாளர் கோபிநாத்தை வெற்றி பெறச்செய்து, 'இண்டியா' கூட்டணியை வலிமையடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்ளிட்ட தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.

