/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்கள பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
முன்கள பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 19, 2024 10:32 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழ்நாடு டெங்கு, கொசுப்புழு ஒழிப்பு, முன்கள பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம், மணியம்பாடி வெங்கட்ரமணசாமி கோவில் மண்டபத்தில், மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் ஜெயவேல் பேசினார்.
கூட்டத்தில், கொசு ஒழிப்பு முன்களப்பணியாளர்களுக்கு ஒரே ஊதியம், ஒரே வேலை வழங்க வேண்டும். சுகாதாரத்
துறையில் வீட்டு வேலை, மருத்துவர்களுக்கு பணி செய்தல், மருத்துவமனை பணி உள்ளிட்ட எவ்வித வேலைகளும் வைக்கக்கூடாது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதிகளவில் சங்க உறுப்பினர்கள் சேர்த்தல், ஒன்றிய, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சந்திரன், கவுரவ தலைவர்கள் டாக்டர் ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

