/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி ஆவினில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.3 கோடி
/
கிருஷ்ணகிரி ஆவினில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.3 கோடி
கிருஷ்ணகிரி ஆவினில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.3 கோடி
கிருஷ்ணகிரி ஆவினில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.3 கோடி
ADDED : அக் 29, 2024 12:59 AM
கிருஷ்ணகிரி ஆவினில் தீபாவளி
விற்பனை இலக்கு ரூ.3 கோடி
கிருஷ்ணகிரி, அக். 29-
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலத்தில், ஆவின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சரயு தலைமை வகித்து, 124 நிரந்தர பணியாளர்களுக்கு 18.67 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகையும், ஒன்றியத்தில் பணிபுரியும், 106 பேர், ஓய்வு பெற்ற, 251 பேர் உட்பட, 357 பேருக்கு, 2.27 லட்சம் ரூபாய் மதிப்பில், தீபாவளி இனிப்பு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 226 பாலக விற்பனை நிலையங்களில், சிறப்பு மைசூர் பாகு, நெய் அல்வா, பால்கேக், பால்கோவா மற்றும் நெய் மிக்சர் என, 22,000 கிலோ இனிப்பு வகைகள் மற்றும், 10 டன் நெய் என மொத்தம், 3 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேல், மேலாளர்கள் ஐயங்கரன் (விற்பனை), கொங்கரசன் (கணக்கு), சுஜா (பால்பதம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

