/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூளகிரியில் கொத்தமல்லி, புதினா சந்தைக்கு கோரிக்கை
/
சூளகிரியில் கொத்தமல்லி, புதினா சந்தைக்கு கோரிக்கை
ADDED : ஜூலை 29, 2025 01:25 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், மா.கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, சூளகிரி வட்ட, 8வது மாநாடு நடந்தது. வட்ட தலைவர் அகமத் பாஷா தலைமை வகித்தார். குண்டப்பா கொடியேற்றினார். சந்திரசேகர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயலாளர் பெருமாள், துவக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் முரளி, வேலை அறிக்கை வாசித்தார். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் முருகேஷ், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ராஜூ உட்பட பலர் பேசினர்.
மாநாட்டில், சூளகிரியை மையப்படுத்தி, கொத்தமல்லி, புதினா சந்தை அமைக்க அரசு முன்வர வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகளை கர்நாடகா அரசு தடுக்க வேண்டும். கிரானைட் மலைகள் மற்றும் கல்குவாரி கிரஷர்களால் ஏற்படும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தலைவராக நாராயணப்பா, செயலாளராக சந்திரசேகர், பொருளாளராக ஸ்ரீநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

