/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பறவைகள், பாலூட்டிகள் கணக்கெடுப்பு பணி
/
பறவைகள், பாலூட்டிகள் கணக்கெடுப்பு பணி
ADDED : மார் 09, 2024 12:58 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறவைகள் மற்றும் பாலுாட்டிகள் கணக்கெடுப்பு பணியில், 200 பறவையினங்கள் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உட்பட மொத்தம், 25 நீர்நிலைகளில் கடந்த ஜன., 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து, கடந்த, 2 மற்றும் 3 ல், இரண்டாம் கட்டமாக பறவைகள் மற்றும் பாலுாட்டிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இப்பணியில், 100 க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். தொலைநோக்கு கருவிகள், கேமரா
உள்ளிட்டவற்றை பயன்
படுத்தி, பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, சிறிய காட்டு ஆந்தை, செந்நாரை, மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உட்பட, 200 க்கும் மேற்பட்ட பறவையினங்களை அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டன. ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, கணக்கெடுப்பு பணியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினார்.
ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற கணக்கெடுப்பு குழுவில், வன பணியாளர்கள் மற்றும் முன் அனுபவமுள்ள நிபுணர்கள் இருந்ததால், பறவையினங்கள் மற்றும் இதர பாலுாட்டிகள் கணக்கெடுப்பு நல்லமுறையில் நிறைவு பெற்றதாக, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்துள்ளார்.

