ADDED : அக் 07, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு கொல்ல நாயக்கனுார் பிரிவு சாலையில், 4 கடைகள் உள்ளன. உரக்கடை, சப்ளையர் கடை, மளிகை கடை குடோன், ஹோட்டல் ஆகியவை உள்ளது.
இந்த நான்கு கடைகளிலும் கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, தொப்பி அணிந்து, 4 கடைகளிலும் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பணம் ஏதும் கிடைக்காததால், 'சிசிடிவி'யில் பொருத்திய டி.வி.,ஆர்களை எடுத்துச் சென்றுள்ளார். புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

