/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேக்கரி கடையில் தீ விபத்து ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்
/
பேக்கரி கடையில் தீ விபத்து ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்
பேக்கரி கடையில் தீ விபத்து ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்
பேக்கரி கடையில் தீ விபத்து ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : செப் 30, 2024 01:01 AM
பேக்கரி கடையில் தீ விபத்து
ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்
ஓசூர், செப். 30-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளி அருகே உள்ள மேல்புளியரசி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 36. சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில், விஜய் ஐயங்கார் என்ற பெயரில், பேக்கரி மற்றும் சுவீட்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது காலை, 11:10 மணிக்கு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் விஜயகுமார் ஈடுபட்டார். கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.
ஆனாலும், கடையிலிருந்த பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள், பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. 4 லட்சம் ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என, உரிமையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கும் சூளகிரி போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

