/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்துார் சிவன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்
/
மத்துார் சிவன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்
ADDED : பிப் 24, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில் பிரசித்தி பெற்ற அழகு திரிபுர சுந்தரி சமேத சோமேஸ்-வரர் ஜோதிர்லிங்க கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை, 10:00 மணிக்கு சோமேஸ்வரருக்கும், அழகு திரிபுர சுந்-தரி அன்னைக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் நடந்தது.
ஊர்மக்கள் மற்றும் பிரதோஷ வழிபாடு சிவனடியார்கள் குழு சார்பில் நடந்த இந்த திருமண வைபவத்தில், சுற்று வட்டார பகு-திகளை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், 'சிவாய நம' என சிவ கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

