/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு
ADDED : மார் 30, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த சில நாட்களாக, 100 கனஅடிக்கு கீழ் நீர்வரத்து உள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு, 8 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 24 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று நீர்மட்டம், 44.10 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடது புற வாய்க்கால் மூலம், 143 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கே.ஆர்.பி., அணையில் நாள்தோறும், 19 கனஅடி நீர் ஆவியாகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

