/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சிசிடிவி' நிறுவ இலவச பயிற்சி 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
'சிசிடிவி' நிறுவ இலவச பயிற்சி 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
'சிசிடிவி' நிறுவ இலவச பயிற்சி 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
'சிசிடிவி' நிறுவ இலவச பயிற்சி 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 29, 2024 02:11 AM
கிருஷ்ணகிரி: 'சிசிடிவி' நிறுவுதல் மற்றும் பழுது நீக்குதல் குறித்து, இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் துவங்க பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகி-றது. அதன்படி தற்போது, 13 நாட்கள், 'சிசிடிவி' நிறுவுதல் மற்றும் பழுது நீக்குதல் குறித்து, இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்த பட்சம், 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ளவர்கள் வரும், 31க்குள் விண்ணப்-பிக்க வேண்டும்.
பயிற்சியில் சீருடை, காலை மற்றும் மதிய உணவு, தேநீர் இலவச-மாக வழங்கப்படும். காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி பயிற்சியும், உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். நிறைவாக தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA என்ற இணையத்தில் படி-வத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விப-ரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை-வாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி, 04343 240500, 94422 47921, 90806 76557 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

