/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க பிரசாரம்
/
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க பிரசாரம்
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க பிரசாரம்
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க பிரசாரம்
ADDED : ஏப் 04, 2024 04:59 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும், காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார்.
அவர், மத்துார் ஒன்றியத்திலுள்ள பாளேத்தோட்டம், தாதம்பட்டி, ஆனந்துார், சாமல்பட்டி, அந்தேரிப்பட்டி, காட்டுப்பட்டி, சூளக்கரை உள்ளிட்ட, 14 கிராமங்களில் ஓட்டு சேகரித்து பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டு, தி.மு.க., ஆட்சியில் பல்வேறு புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிருக்கு உரிமை தொகை, விடியல் பயணத்திட்டம், புதுமை பெண் திட்டம் என, பல்வேறு திட்டங்களை, மகளிர் முன்னேற்றத்திற்காக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். இதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தற்போது பின்பற்றி வருகின்றன. மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம், பெண்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், அறிவிக்காத பல திட்டங்களை தமிழ்நாட்டில் செய்துள்ளார். தற்போது படிக்கும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க தமிழ்புதல்வன் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் எல்லாம் நாடு முழுவதும் சென்று சேர, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், 'இண்டியா' கூட்டணியின், காங்., வேட்பாளர் கோபிநாத்தை பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்
தி.மு.க.,வின் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., நரசிம்மன், மருத்துவரணி மாவட்ட துணைத்தலைவர் தென்னரசு மற்றும் இளைஞரணியினர் உள்பட, அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

