ADDED : செப் 23, 2026 06:55 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை எதிரே, தொ.மு.ச., சார்பில்,
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட
கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்
பார்த்திபன் வரவேற்றார். மாநில கூட்டுறவு வங்கி தொ.மு.ச.,
பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில்,
தொழிலாளர் விரோத, நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
மின்சாரம், விதைச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளின்
கோரிக்கையை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய, மத்திய
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எண்ணுார், துாத்துக்குடி அனல்
மின்நிலையங்களின் விரிவாக்கத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது.
போக்குவரத்தில், 1,000 மின் பேருந்துகளை தனியாரிடம்
ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி
முழக்கங்கள் எழுப்பினர்.
தொ.மு.ச., நிர்வாகிகள் இளவரசன், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
