/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ம.க., ஒன்றிய செயலரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி
/
பா.ம.க., ஒன்றிய செயலரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி
ADDED : ஏப் 12, 2024 08:55 PM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதியில், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அன்று இரவு, 9:30 மணிக்கு செல்லம்பட்டி பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
பிரசார செலவிற்காக செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, பா.ம.க., ஒன்றிய செயலர் ரங்கநாதன், 55, என்பவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஜெகன்நாதன், 35, என்பவர், 'நான் பா.ஜ., நிர்வாகி. எனக்கு பிரசாரம் குறித்து தகவல் தெரிவிக்காமலும், செலவுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் தனக்கு பங்கு கொடுக்கவில்லை' எனக் கூறி, ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் நடந்த கைகலப்பில் ரங்கநாதனின் மண்டை உடைந்தது. அங்கிருந்த பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் மற்றும் பா.ம.க.,வினர் சமாதானப்படுத்தினர்.
காயமடைந்த ரங்கநாதன் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஒரே கூட்டணியில் உள்ள கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டு, மண்டை உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

