/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராகவேந்திர சுவாமியின் 353வது ஆராதனை விழா
/
ராகவேந்திர சுவாமியின் 353வது ஆராதனை விழா
ADDED : ஆக 20, 2024 02:41 AM
தர்மபுரி: தர்மபுரி விருபாட்சிபுரத்திலுள்ள, உடுப்பி புத்திகே மடத்தில், ராகவேந்திர சுவாமியின், 353வது ஆராதனை விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில், கோ பூஜையுடன் பவுர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண சுவாமி பூஜை நடந்தது. விழாவின் முக்கிய தினமான நாளை மத்திய ஆராதனையின் போது, 50 தம்பதியினர் பங்கேற்கும் கனக பூஜையில், 1,008 நாமாவளிக்கு அர்ச்சனை செய்யப்பட உள்ளது.
வரும், 22ல் உத்ர ஆராதனையும், 23ல் கணபதி ஹோமம், சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது. விழாவின் அனைத்து தினங்களிலும் காலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு வேத பாராயணம், 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், 10:00 மணிக்கு பல்லாக்கு உற்சவம், 10:30 மணிக்கு வெள்ளி ரத உற்சவம், 11:00 மணிக்கு கனக பூஜை, 12:00 மணிக்கு நைவேத்யம் நடக்கிறது.

