/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'ஹேக்கத்தான்'150 கல்லுாரி மாணவியர் பங்கேற்பு

ADDED : ஏப் 08, 2025 01:53 AM
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'ஹேக்கத்தான்'150 கல்லுாரி மாணவியர் பங்கேற்பு
ஓசூர்:ஓசூர் அருகே இயங்கும் பி.எம்.சி., டெக் இன்ஜினியரிங் கல்லுாரியில், தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் சார்பில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் பொறியியலில் பெண்கள் என்ற ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது.
பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர், இயக்குனர் சுதாகரன், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மைய ஒருங்கிணைப்பாளர் விஜயதீபன் மற்றும் கோமளாதேவி, ஓசூர் ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி ஆகியோர் பேசினர். 150 க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 1000 க்கும் மேற்பட்ட மாணவியர், தங்களின் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை
காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர்.இந்த போட்டிகளில் சென்னை லயோலா கல்லுாரி மற்றும் ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரி மாணவியர் முதலிடம் பிடித்தனர். சிறப்பாக செயல்பட்ட மாணவியருக்கு, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் சார்பில் இன்டர்ன்ஷிப் ஆபர் வழங்கப்பட்டன.
டசால்ட் சிஸ்டம்ஸ் சார்பில் தினேஷ்தேஜ், ஓசூர் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர் எழில் பாரதி, கல்லுாரி இயந்திரவியல் துறை தலைவர் ராஜசேகரன், பி.ஆர்.ஓ., விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.