/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மூன்று கோவில்களில் ஆன்மிகபுத்தக நிலையங்கள் திறப்பு
/
மூன்று கோவில்களில் ஆன்மிகபுத்தக நிலையங்கள் திறப்பு
மூன்று கோவில்களில் ஆன்மிகபுத்தக நிலையங்கள் திறப்பு
மூன்று கோவில்களில் ஆன்மிகபுத்தக நிலையங்கள் திறப்பு
ADDED : ஏப் 05, 2025 01:39 AM
மூன்று கோவில்களில் ஆன்மிகபுத்தக நிலையங்கள் திறப்பு
கிருஷ்ணகிரி:ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், 100 ஆன்மிக புத்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் சந்திர
சூடேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் என, மூன்று கோவில்களில் ஆன்மிக புத்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
காட்டிநாயனப்பள்ளி, ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமுவேல், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் கோவிந்தன் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி புத்தக விற்பனையை துவக்கி வைத்தனர். கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணசந்த், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கவிப்பிரியா, கண்ணம்பள்ளி பெருமாள் கோவில் செயல் அலுவலர் சித்ரா, தி.மு.க., கிழக்கு நகர பொறுப்பாளர் வேலுமணி, கவுன்சிலர் புவனேஸ்வரி, அண்ணா தொழிற் சங்கம் ஜெயக்குமார் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.