sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 24, 2025 01:38 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை,: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை ரவுண்டானாவில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பி.டி.ஓ., அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இதில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

உதவி கோட்டபொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பெரியார்செல்வம், கண்காணிப்பாளர் காத்தவராயன், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., மோகன் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us