/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலை பிச்சம்பட்டியில் அடர்வன காடுகள் 22,000 மரங்களை நட்டு இளைஞர்கள் அசத்தல்
/
தான்தோன்றிமலை பிச்சம்பட்டியில் அடர்வன காடுகள் 22,000 மரங்களை நட்டு இளைஞர்கள் அசத்தல்
தான்தோன்றிமலை பிச்சம்பட்டியில் அடர்வன காடுகள் 22,000 மரங்களை நட்டு இளைஞர்கள் அசத்தல்
தான்தோன்றிமலை பிச்சம்பட்டியில் அடர்வன காடுகள் 22,000 மரங்களை நட்டு இளைஞர்கள் அசத்தல்
ADDED : நவ 14, 2024 07:15 AM
கரூர்: பிச்சம்பட்டியில் அடர்வனம் உருவாக்கும் நோக்கில், 22 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் இளைஞர்களை ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், பிச்-சம்பட்டி பஞ்., உட்பட்ட பகுதிகளில், 300 ஏக்கருக்கு மேல் அர-சுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இங்கு சிறு மலைகள், கிரானைட் பாறைகள் என இயற்கை அழகுடன் பனை, நாட்டு மரங்கள் அதிக அளவில் இருந்தன. தற்போது கல்குவாரிகள், மனைபிரிவுகள் ஆகியவற்றால் மரங்கள் பெருமளவில் அழிக்கப்-பட்டு விட்டன.
இங்குள்ள இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து அடர்வனம் உரு-வாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவர்கள், அடர்வனம் குறுங்காடு நண்பர்கள் என்ற அமைப்பு மூலம் மரங்களை வளர்த்து வருகின்றனர்.இது குறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகா-னந்தம் கூறியதாவது:தண்ணீர் வளம் குறைவாக உள்ள பகுதிகளில் மியாவாக்கி காடுகள் சிறந்தவை. மிகக்குறைந்த இடத்தில் மியாவாக்கி முறையில் அடர்வன காடுகளை உருவாக்கிவிடலாம். ஈரோட்டில் உள்ள நண்பரின் உதவியுடன் மியாவாக்கி
முறையில், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், ஆற்று ஓடை, குளம், குட்டை, தடுப்பணை போன்ற இடங்களில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்-கப்பட்டு வருகின்றன. புறம்போக்கு இடங்களில் அடர்வனம் உருவாக்கும் நோக்கில் ஒரே இடத்தில் பல்வேறு வகையான, 500 முதல், 3,000 மரக்கன்-றுகளை வளர்க்கப்பட்டுள்ளன. இங்கு, அரசு, வேம்பு, புளி, இலவம், பூவரசு, நொச்சி, வாகை,
கொடுக்காபுளி மற்றும் மூலிகை தொடர்புடைய மரங்களை நடவு செய்து பராமரிக்கப்-பட்டு வருகிறது. தற்போது நல்ல முறையில் மரங்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. ஒத்தையூர், ஆலமரத்துப்பட்டி, துரையூர்,
தாழைப்பட்டி உள்பட பகுதியில் மட்டும், 7 ஆயிரத்-துக்கு மேற்பட்ட மரங்களை வளர்த்து அடர்வனம் உருவாக்கி உள்ளோம். வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாகுறை இருந்த போதிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் துணையோடு தண்ணீர் லாரி மூலம் மரக்கன்றுகள் தண்ணீர் விட்டு பாதுகாக்கப்படுகிறது. இதுவரை, 22 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பரா-மரித்து வருகிறோம். அடர்வனம் பகுதியில் காற்று மாசு கட்டுப்ப-டுத்தப்படுவதுடன், பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் வனத்தில் அதிக அளவு வரும். அவற்றின் மூலம் உயிர்ச்சூழல் மேம்படும்.
மரக்கன்றுகள் நன்கு வளர்ந்தவுடன் வனத்துக்குள் செல்லும் உணர்வு மக்களுக்குக் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

