ADDED : டிச 23, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த கள்ளை பஞ்., சுக்காம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சரவணன், 32. கூலி தொழிலாளி. இவரது மனைவி காவியா, 24. கடந்த 15ம் தேதி காலை 10:30 மணியளவில் தனது வீட்டில் இருந்து, அய்யர்மலை சோம வாரம் திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர்,
மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தக-வலும் கிடைக்கவில்லை.தனது மனைவியை காணவில்லை என, சர-வணன் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

