sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதிகள் தேவை வியாபாரிகள் எதிர்பார்ப்பு

/

அடிப்படை வசதிகள் தேவை வியாபாரிகள் எதிர்பார்ப்பு

அடிப்படை வசதிகள் தேவை வியாபாரிகள் எதிர்பார்ப்பு

அடிப்படை வசதிகள் தேவை வியாபாரிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 09, 2026 05:21 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: பொட்டிரெட்டிபட்டி வாரச்சந்தைக்கு, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி மெயின் ரோட்டில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடக்கும் வாரச்சந்-தைக்கு நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியா-பாரிகள் மளிகை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்-றனர். மேலும், உள்ளுர் விவசாயிகள் காய்கறிகள் விற்பனை செய்வதற்-காக, 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதேபோல், இந்த சந்தைக்கு 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்லும் நிலையில், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த-வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் வியாபாரிகள்,

பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

வாரச்சந்தைக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை, கட்டணம் வசூல் செய்ய ஏலம் விடப்பட்டுள்ளது. இங்கு வரும் வியாபாரிக-ளிடம், வாரந்தோறும் ஏலம் எடுத்தவர்கள் வாடகை வசூல் செய்-கின்றனர். ஆனால், இந்த சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிப்பிடம் உள்-ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட-வில்லை.






      Dinamalar
      Follow us