/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.24 கோடியில் அமைத்த தார்ச்சாலை 7 மாதத்தில் ஏடு ஏடாக பெயரும் அவலம்
/
ரூ.24 கோடியில் அமைத்த தார்ச்சாலை 7 மாதத்தில் ஏடு ஏடாக பெயரும் அவலம்
ரூ.24 கோடியில் அமைத்த தார்ச்சாலை 7 மாதத்தில் ஏடு ஏடாக பெயரும் அவலம்
ரூ.24 கோடியில் அமைத்த தார்ச்சாலை 7 மாதத்தில் ஏடு ஏடாக பெயரும் அவலம்
ADDED : ஆக 12, 2024 06:54 AM
கரூர் : மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 24 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, ஏழு மாதத்தில் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
கரூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகள், மாவட்ட இதர சாலைகள் என, 900 கி.மீ., நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்படுகிறது. புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு, அவ்வப்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நொய்யல் அருகே, குப்பம், தொப்பம்பட்டி வழியாக வைரமடை வரை, சாலை செல்கிறது. அதில், 12 கி.மீ., துாரத்துக்கு, 24 கோடி ரூபாய் வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை அமைத்த, ஏழு மாதத்திற்குள் சேதமடைந்துள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தார்ச்சாலை அமைக்க பல்வேறு தரக்கட்டுப்பாடுகள் உள்ளன. அதில், தார் தரம், கற்களின் அளவு ஆகியவற்றை சரி பார்த்த பிறகே சாலை அமைக்க வேண்டும். பின், தரக்கட்டுப்பாடு பிரிவு ஆய்வு செய்து சான்று வழங்கிய பின், ஒப்பந்ததாரருக்கு தொகை வழங்கப்படும். ஆனால், கரூர் நொய்யல் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, ஏழு மாதத்திற்குள், தோசையை திருப்பி போடுவது போல் ஏடு, ஏடாக பெயர்ந் வருகிறது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை ஒப்பந்ததாரர் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மாவட்ட கோட்ட பொறியாளர் ரவிக்குமார் கூறுகையில், ''நொய்யல் அருகே, குப்பம் பகுதியில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை பகுதியில் மண் தன்மை பிரச்னையால் அடிக்கடி, சாலையில் விரிசல் ஏற்படுகிறது. அதனை சரி செய்து வருகிறோம்,'' என்றார்.

