ADDED : மார் 30, 2024 01:56 AM
கரூர்:கரூர் அருகே புகழ்பெற்ற திருக்கோவில் பகுதியில், நிழற்கூடம் இல்லாததால், பக்தர்கள் அவதிப் படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் அருகே, பிரசித்தி பெற்ற பாலமலை
சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில்
அருகருகே பெருமாள் கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள்
உள்ளது. கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திண்டுக்கல்
மாவட்டத்தில் இருந்து பவுர்ணமி, கார்த்திகை, அமாவாசை உள்ளிட்ட விசேஷ
நாட்களில், பாலமலைக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து
செல்கின்றனர். ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை.
இதனால்
பாலமலைக்கு வரும் பக்தர்கள் மழை காலத்திலும், வெயில் அதிகமாக
அடிக்கும் போதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கோவில் அடிவார
பகுதியில் உள்ள பாலமலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் கட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

