/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்களை தாக்கி செயின் பறிப்பு போலீசாரை கண்டித்து மறியல்
/
பெண்களை தாக்கி செயின் பறிப்பு போலீசாரை கண்டித்து மறியல்
பெண்களை தாக்கி செயின் பறிப்பு போலீசாரை கண்டித்து மறியல்
பெண்களை தாக்கி செயின் பறிப்பு போலீசாரை கண்டித்து மறியல்
ADDED : ஜன 17, 2024 10:53 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஞானஜோதி, 42. இவர் தன் மனைவி ஊரான பாலவிடுதி பஞ்., சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்னகாமாட்சி, 40, மைத்துனர் மனைவி விஜயலட்சுமி, ஆகியோருடன் டிராவல்ஸ் வேனில் டிரைவர் பெரியசாமி ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் கொசூர் அருகே உள்ள கிராமத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தனர். தரகம்பட்டி நெடுஞ்சாலை சேர்வைக்காரன்பட்டி அருகே, ஐந்து பேர் கையில் செங்கரும்புடன் வாகனத்தை வழிமறித்து
செங்கரும்பால் தாக்கினர்.
பின்னர் அன்னகாமாட்சி, மைத்துனர் மனைவி விஜயலட்சுமி இருவரையும் கரும்பால் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். தகவல் அறிந்த உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சேர்வைக்காரன்பட்டி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வெகு நேரமாகியும் போலீசார் வராததால், அனைவரும் ஒன்று சேர்ந்து பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் இரவு 12.00 மணி வரை நடந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் கலைந்தனர்.
நேற்று காலை 11.00 மணி வரை பாலவிடுதி போலீசார்
எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கிராம மக்கள் மீண்டும் பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டு
முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து, மனு ரசீது வழங்கியதால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

