/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உலக நன்மைக்காக அறம்மிகு அடிகளார் சிறப்பு பூஜை
/
உலக நன்மைக்காக அறம்மிகு அடிகளார் சிறப்பு பூஜை
ADDED : டிச 17, 2024 01:51 AM
குளித்தலை, டிச. 17-
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தென்கடை குறிச்சி ஒத்தக்கடையில், நான்கு திசைகளிலும் விவசாய பகுதி மத்தியில், ஸ்ரீ தக்ஷிணகாளி சித்தர் பீடம் அறக்கட்டளை பிரம்மா ஞானம் தர்மசாலை என்ற பெயரில் கோவில் உள்ளது. ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசை அன்று கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
ஆண்டுக்கு ஒரு முறை, கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அதன் நிறுவனர் அறம்மிகு அடிகளார், கோவில் வளாகத்துக்குள், 10 அடி ஆழத்தில் உள்ள பிரம்ம ஞான பாதாள அறையில் அமர்ந்து இரவு, பகலாக தியானத்தில் ஈடுபடுவதுண்டு. அதன்படி, நேற்று முன்தினம் கார்த்திகை மாத பவுர்ணமி கிருத்திகையை முன்னிட்டு அறம்மிகு அடிகளார், ஸ்ரீ தக்ஷிண காளிக்கு சிறப்பு பூஜை செய்தார். இதையடுத்து, பாதாள அறைக்குள் தியானம் செய்ய சென்றார். பின்னர், அந்த அறைக்கு முன்பாக பக்தர்களும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

