ADDED : மார் 02, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் நகராட்சி பகுதி கழிவு நீர், நேரடியாக பாலம்மாள்புரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கலக்கிறது.
வழக்கமாக ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும்போது, சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாத நீரை வாய்க்கால்களிலும், ஆற்றிலும் திறந்து விடுவர். இந்நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் உட்பட அனைத்து கழிவுநீரும், சுத்திகரிப்பு இல்லாமல் நேரடியாக கலக்கப்படுகிறது. இதனால், ஆற்று நீர் முற்றிலும் மாசுபட்டு வருகிறது. ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

