/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானாவாரி எள் சாகுபடி விளைச்சல் சரிந்து பாதிப்பு
/
மானாவாரி எள் சாகுபடி விளைச்சல் சரிந்து பாதிப்பு
ADDED : நவ 05, 2025 02:00 AM
கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மானாவாரி விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட எள், மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, திருமேனியூர், பாப்பகாப்பட்டி, சிவாயம், குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, சரவணபுரம், மத்திப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர்.
எள் சாகுபடி தேவையான தண்ணீர், பருவ மழை காரணமாக கிடைத்தது.
மழை நீரால் விளைந்த எள் செடிகளை அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, விளைச்சல் சரிந்து மகசூல் குறைந்துள்ளது. இதனால் மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

