/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலையில் சார்-பதிவாளர் அலுவலகம் கட்ட கோரி தீர்மானம்
/
தோகைமலையில் சார்-பதிவாளர் அலுவலகம் கட்ட கோரி தீர்மானம்
தோகைமலையில் சார்-பதிவாளர் அலுவலகம் கட்ட கோரி தீர்மானம்
தோகைமலையில் சார்-பதிவாளர் அலுவலகம் கட்ட கோரி தீர்மானம்
ADDED : டிச 16, 2025 05:45 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில், தமிழ்-நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். மாநில தலைவர் நாகராஜன் பேசினார்.
மாநில செய-லாளர் வக்கீல் தியாகராஜன், மாநில பொரு-ளாளர் பழனிசாமி, இளைஞரணி சுரேஷ், ரவிசந்-திரன், கொள்கைபரப்பு செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தோகைமலை ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். தோகைமலை அரசு மருத்-துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தோகை
மலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். தோகைமலையில் சார் -பதிவாளர் அலுவலகம், வருவாய் குறுவட்ட அலுவலகம் அமைக்க வேண்டும். இங்குள்ள ஏரி, குளங்க-ளுக்கு காவிரி உபரிநீரை நீரேற்று திட்டம் மூலம் நிரப்பிட வேண்டும். காவல்காரன்பட்டியில் நெடுஞ்சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும் வேண்டும் உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணை செயலாளர்கள் கனகராஜ், தங்-கராஜ் ஆனையப்பன், ராகவன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

