/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான படித்துறை சீர் செய்ய கோரிக்கை
/
சேதமான படித்துறை சீர் செய்ய கோரிக்கை
ADDED : ஏப் 03, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை
அடுத்த திம்மாச்சிபுரம், கே.பேட்டை, வதியம், மணத்தட்டை,
நாப்பாளையம், கடம்பவர்கோவில், விநாயகர்கோவில், பெரியபாலம்,
மலையப்பன் காலனி, தண்ணீர்பள்ளி, பட்டவர்த்தி, ராஜேந்திரம்,
மருதுார் ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள், தென்கரை பாசன வாய்க்காலை
பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வாய்க்காலில் உள்ள படித்துறை
கற்கள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் குளிக்கும் போதும்,
துணிகளை துவைக்கும் போதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பொது
பணித்துறை நிர்வாகம், சேதம் ஏற்பட்ட படித்துறையை சீர் செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

