/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவுப்படி அகற்றம ்
/
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவுப்படி அகற்றம ்
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவுப்படி அகற்றம ்
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவுப்படி அகற்றம ்
ADDED : பிப் 28, 2024 07:48 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., ஒத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சண்முகவள்ளி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் மாடி வீடு கட்டினார். அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாரியம்மன் கோவில் கட்டும்பணி நடந்தது.
இதையடுத்து, தன் வீட்டுக்கு அருகே இடையூறாக கட்டப்பட்டு வரும் கோவில் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி, அகற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதி மன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசு நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோவில், வீடுகளை அகற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவுப்படி, குளித்தலை தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர், கடந்த வாரம் அரசு நிலத்தை அளவீடு செய்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு குளித்தலை ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் தாசில்தார், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

