/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
/
இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கம்யூ., கட்சி
சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர், டிச. 11-
கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தொழிலதிபர் அதானி மீதான குற்றச்சாட்டு மற்றும் மணிப்பூர் கலவரம் தொடர்பான பிரச்னையை லோக்சபா கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லாத திண்டாட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணை செயலர்கள் மோகன்குமார், சண்முகம், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

