/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபைல்போன் டவர் அமைக்க பள்ளப்பட்டி மக்கள் எதிர்ப்பு
/
மொபைல்போன் டவர் அமைக்க பள்ளப்பட்டி மக்கள் எதிர்ப்பு
மொபைல்போன் டவர் அமைக்க பள்ளப்பட்டி மக்கள் எதிர்ப்பு
மொபைல்போன் டவர் அமைக்க பள்ளப்பட்டி மக்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 02, 2024 04:08 AM
கரூர்: மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளப்பட்டி சபியா நகர் பொதுமக்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பெட்டியில், மனுவை போட்டனர்.
அதில், கூறியிருப்பதாவது:
அரவக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, பள்ளப்பட்டி நகராட்சி, 27 வது வார்டு சபியா நகரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தனியார் நிறுவனத்தின் மொபைல்போன் டவர் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த இடத்தில் மிக ஆழமாக பள்ளம் தோண்டுவதால், பல வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டது. டவர் அமைத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். குறிப்பாக, உடல் நலம் பாதித்தவர்களுக்கு பிரச்னைகள் ஏற்படவும், பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பள்ளப்பட்டி நகராட்சியிலும் புகார் அளித்துள்ளோம். ஆயினும், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

