/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
/
அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
ADDED : மார் 16, 2024 01:59 AM
கரூர்:கரூர் அருகே, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்
மாநகராட்சி, 16 வது வார்டு ஜெ.ஜெ., கார்டன், ரேஷன் கடை சந்து, இ.பி.,
காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, மின் விளக்கு வசதி செய்து
தரும்படி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதனால்,
அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஜெ.ஜெ., கார்டன் பகுதியில் சாலை
மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த, பசுபதிபாளையம் போலீசார் சம்பவ
இடத்துக்கு சென்று, மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து, அடிப்படை
வசதிகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி கொள்ளலாம் என, தெரிவித்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். அந்த பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

