/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பூங்கா அமைக்க பயணிகள் வேண்டுகோள்
/
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பூங்கா அமைக்க பயணிகள் வேண்டுகோள்
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பூங்கா அமைக்க பயணிகள் வேண்டுகோள்
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பூங்கா அமைக்க பயணிகள் வேண்டுகோள்
ADDED : மார் 14, 2024 01:28 AM
கரூர், கரூர் மாவட்டம், பெரிய
ஆண்டாங்கோவிலில், அமராவதி ஆற்றின் குறுக்கே, 6 ஆண்டுகளுக்கு முன், தடுப்பணை கட்டப்பட்டது. ஆற்றில் தண்ணீர் செல்லும் காலக்கட்டத்தில் தடுப்பணை ரம்மியமாக காட்சியளிக்கும்.
இதனால், கரூர் டவுன், சுக்காலியூர், திருகாம்புலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை ரசிக்க வந்து செல்கின்றனர். ஆனால், தடுப்பணை பகுதியில் பூங்கா வசதி இல்லாததால் பொதுமக்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்று விடுகின்றனர். கரூர், க.பரமத்தி, தென்னிலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில், பெரியளவில் பூங்கா வசதிகள் இல்லை.
கரூர் கொளந்தாகவுண்டனுாரில் கடந்த, 2012 ல், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க பணி துவக்கப்பட்டது. தற்போது, அந்த இடத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
நெரூரில் உள்ள சுற்றுலா பூங்கா, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுது போக்குக்காக செல்ல உரிய இடம் இல்லை.
இதனால், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 2 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை பகுதியில் பூங்கா அமைத்தால், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
தடுப்பணை பகுதியில், காலியாக உள்ள இடத்தில் பூங்கா அமைக்க சுற்றுலாத் துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

