/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தெரசா கார்னர் அருகே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச்சு
/
கரூர் தெரசா கார்னர் அருகே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச்சு
கரூர் தெரசா கார்னர் அருகே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச்சு
கரூர் தெரசா கார்னர் அருகே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச்சு
ADDED : அக் 29, 2024 01:07 AM
கரூர் தெரசா கார்னர் அருகே
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச்சு
கரூர், அக். 29-
கரூர் திருச்சி சாலை சுங்க கேட் அருகில் தெரசா கார்னர் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர்.
இங்கு, கொளந்தனுார் பிரிவு சாலை இருப்பதால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திட வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து தெரசா கார்னர் அருகில புதிய வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடை அமைத்து இன்னும் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது என, நமது நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியாகி இருந்தது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்குள்ள வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.