/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துார் பிரிவில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி
/
ஆத்துார் பிரிவில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி
ஆத்துார் பிரிவில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி
ஆத்துார் பிரிவில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 20, 2024 08:13 AM
கரூர்: கரூர்-ஈரோடு சாலை யில், ஆத்துார் பிரிவில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூர்-ஈரோடு சாலை ஆத்துார் பிரிவு பகுதியில், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. மேலும், ஆத்துாரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் உள்ளது. அதிலிருந்து, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, 24 மணி நேரமும் லாரியில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படுகிறது. கரூரில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறது.
இதனால், ஈரோடு சாலை ஆத்துார் பிரிவு பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்னல் சேதம் அடைந்து, செயல்படாமல் உள்ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் - ஈரோடு சாலை ஆத்துார் பிரிவில், சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

